பட்டத்தால் பறிபோன இரண்டு உயிர்கள் – அதிர்ச்சி சம்பவம் (காணொளி)

Post views-


மினுவங்கொடை கமன்கெதர பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட மகன் மற்றும் தந்தை இருவரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மினுவங்கொடை பதில் நீதவான் மங்கள வர்ணகுல சூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்..


பிரேத பரிசோதனை மேற்கொண்டு மரணத்திக்கான காரணத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான் சட்ட வைத்திய அதிகாரிக்கு அறிவித்துள்ளார்.

அதேபோல் , கொலை தொடர்பில் சாட்சியாளர்கள் இருப்பார்களாயின் எதிர்வரும் 6ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பதில் நீதிவான் காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.

கமன்கெதர பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த கொலைகள் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இன்று மதியம் இடம்பெற்றது.

இதன்போதே, பதில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை , பட்டம் விடுதல் தொடர்பில் நேற்று ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் , தற்போதைய நிலையில் அயல் வீட்டில் உள்ள தந்தை மற்றும ்மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவங்கொடை காவற்துறை தெரிவித்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    முந்திய வரலாறுகளை அறிய

    Label 3

    விளம்பரம் செய்யுங்கள்

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    உங்களுக்கும் இணையதளம்

    Like On Facebook

    Total Pageviews

    Facebook இல் like here செய்யுங்கள்

    Labels